இந்தியா

சிலிகுரியில் இருந்து காத்மாண்டுவுக்குப் பேருந்து சேவை தொடக்கம்

DIN

வடக்கு மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு இடையே பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த பேருந்துச் சேவையை மாநில போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் தொடங்கி வைத்தார்.

தொடங்கிவைத்து மேலும் அவர் கூறுகையில், 

வாழ்வாதாரத்திற்காக சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான நேபாள மக்களுக்கு இந்த சேவை பயனளிக்கும். 

இது இந்தப் பகுதியில் உள்ள சுற்றுலாவை மேம்படுத்தும். 

வடக்கு வங்காள மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு (NBSTC) சொந்தமான இந்த பேருந்து தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

டிக்கெட்டுகளின் விலை ரூ.1,500 ஆகும். நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே பேருந்து நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

சிலிகுரியில் மாலை 3 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். இப்பேருந்தில் 40 இருக்கைகள் உள்ளன. 

மேற்கு வங்க அரசு சிலிகுரியில் இருந்து பங்களாதேஷுக்கு பேருந்து சேவையையும் திட்டமிட்டு வருவதாக ஹக்கீம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT