முகப்பு
இந்தியா

அசாமில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் திரௌபதி முர்மு

ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு  அசாம் வந்துள்ளார். 

Updated On : 6 ஜூலை, 2022 at 11:46 AM
பகிர்:

ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு  அசாம் வந்துள்ளார். 

ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான கன பரிஷத்(ஏஜிபி) மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்(யுபிபிஎல்) ஆகியவற்றின் எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்திக்க உள்ளார் .

செவ்வாய் இரவு அசாம் வந்த முர்முவை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள், மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலித் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Advertisement

அவர் இங்குள்ள நகர விடுதியில், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.