இந்தியா

அக்னிபத் திட்டம்: விமானப் படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்

DIN

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேருவதற்கு 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையில் சேருவதற்கு அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பணியில் சேர்பவர்களில் 25 சதவிதத்தினரை தவிர, மற்றவர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜூன் 24ஆம் தேதி விமானப் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

நேற்றுடன் விண்ணப்பத்திற்கான காலவகாசம் நிறைவடைந்த நிலையில், விமானப் படையில் சேருவதற்கு மட்டும் 7,49,899 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பத்திருப்பதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

இதுவரை விமானப் படை பணி நியமனத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவே அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT