இந்தியா

பஞ்சாப் முதல்வருக்கு நாளை திருமணம்: கேஜரிவால் பங்கேற்பு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் எளிமையான முறையில் நாளை(ஜூலை 7) நடைபெறவுள்ளது.

DIN

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் எளிமையான முறையில் நாளை(ஜூலை 7) நடைபெறவுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட பகவந்த் மான்(வயது 48), மாநிலத்தின் 17வது முதல்வராக இந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். 

முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வரும் சூழலில், சண்டிகரில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான முறையில் குர்ப்ரீத் கெளர் என்பவரை நாளை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள இந்த திருமணத்தில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலும் பங்கேற்கிறார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவியை பகவந்த் மான் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேரே இஷ்க் மே 3 நாள் வசூல் இவ்வளவா?

பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்ற சமந்தா திருமணம்!

இலங்கையில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆனது!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

சமந்தா - ராஜ் நிதிமோர் திருமணம்!

SCROLL FOR NEXT