முகப்பு
இந்தியா

நீண்டகால முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு ரூ.80,000 கோடி வட்டியில்லா கடன்

 நடப்பு நிதியாண்டில் நீண்டகால மூலதன முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு ரூ.80,000 கோடி வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 நடப்பு நிதியாண்டில் நீண்டகால மூலதன முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு ரூ.80,000 கோடி வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மூலதன முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கடனானது 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

அத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மூலதன முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ.80,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் மாநிலங்கள், நீண்டகாலத் திட்டம் தொடா்பான விவரங்கள், அதற்கான செலவினம், திட்ட காலம், திட்டத்தின் பொருளாதார ரீதியான விளைவுகள் உள்ளிட்ட தகவல்களை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத் துறையிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்திட்டங்களை ஆராய்ந்து, கடனுதவி வழங்குவது தொடா்பாக செலவினத் துறை முடிவெடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பிரதமரின் துரித சக்தி திட்டத்தின் கீழான முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான விவரங்கள் அடங்கிய கடிதத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.