வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்: 9 பேர் பலி; சிறுமி மீட்பு 
இந்தியா

வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்: 9 பேர் பலி; சிறுமி மீட்பு

தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது  பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ANI

நைனிடால்:  உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை, தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது  பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த கோர விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வெள்ளத்துக்குள் சிக்கியிருக்கும் காரிலிருந்து மற்ற உடல்களை மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் தத்தளித்து வருகிறார்கள்.

இது குறித்து காவல்துறை உதவி ஆய்வாளர் கூறுகையில், தேலா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் 9 பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். காரிலிருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. 5 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT