முகப்பு
இந்தியா

வெளிநாட்டு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு கலால் வரி விலக்கு

 வெளிநாட்டு விமானங்களை இயக்குவதற்காக இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விமான எரிபொருளுக்குக் கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

 வெளிநாட்டு விமானங்களை இயக்குவதற்காக இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விமான எரிபொருளுக்குக் கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான எரிபொருள் மீதான ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.6 கலால் வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது. இந்த வரியானது, வெளிநாட்டு விமானங்களை இயக்கும் இந்திய விமான நிறுவனங்களுக்குப் பொருந்துமா எனக் கேள்விகள் எழுந்தன.

இந்த வரியின் காரணமாக, விமான எரிபொருள் கொள்முதலுக்காக இந்திய நிறுவனங்கள் 11 சதவீத கலால் வரியை செலுத்தும் சூழல் உருவாகும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு கலால் வரி விதித்து வருவதாக விமான நிறுவனங்கள் மத்திய அரசிடம் முறையிட்டன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு வழித்தடங்களில் விமானங்களை இயக்குவதற்காக இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விமான எரிபொருளுக்குக் கலால் வரி விதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலை ஏற்கெனவே சா்வதேச அளவில் உயா்ந்து வரும் நிலையில், அதன் மீதான கலால் வரியில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது, விமான நிறுவனங்களுக்குப் பெரும் பலனளிக்கும் என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.