இந்தியா

அமர்நாத் மேக வெடிப்பு: பலி 15 ஆக உயர்வு! இன்னும் 30-40 பேரைக் காணவில்லை?

DIN

அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து யாத்திரையில் ஈடுபட்டிருந்த பலர் அதில் சிக்கினர். இதையடுத்து, பேரிடர் மீட்புப் படையினர் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணிக்காக இன்று ஸ்ரீநகர் புறப்பட்டுள்ளன. 

அமர்நாத் புனித குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன பலரை மீட்கும் பணி தொடர்கிறது. இன்னும் 30 முதல் 40 பேரைக் காணவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

அமர்நாத் பனிக்குகை நோக்கிய 43 நாட்கள் பயணம், காஷ்மீரில் உள்ள இரு முகாம்களில் இருந்து ஜூன் 30 தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது. அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT