இந்தியா

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிரந்தரத் தலைவராகும் ஜெகன் மோகன் ரெட்டி

DIN

ஆந்திரத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிரந்தரத் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2011ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்டது. தற்போது ஆந்திரத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியானது அம்மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சியாக உள்ளது.

ஏற்கெனவே இரண்டு முறை கட்சியின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிரந்தரத் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியைத் தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் அமைப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்மூலம் ஜெகன் மோகன் ரெட்டி அக்கட்சியின் நிரந்தரத் தலைவராகியுள்ளார். மேலும் கட்சியின் கெளரவ தலைவராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாரான ஒய்.எஸ்.விஜயம்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

எனினும் இந்த அமைப்பு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT