இந்தியா

அசாம் வெள்ளம்: மத்திய அரசின் உதவியை நாடும் முதல்வர் 

PTI

அசாமில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 30 முதல் 40 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார். 

சர்மா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வெள்ள பாதிப்பு குறித்து விளக்கமளித்தார். 

மேலும், வெள்ளத்தால் சுமார் 30 முதல் 40 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் மத்திய அரசின் உதவியையும் அவர் நாடியுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

வீடுகள் கடுமையாகச் சேதமடைந்ததால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முன்பணத் தொகையை விடுவிக்குமாறு சர்மா, ஷாவிடம் கோரிக்கை விடுத்தார். 

மேலும், வெள்ள நிலைமையை மதிப்பீடு செய்து, மாநில பேரிடர் நிவாரண நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதே அரசின் இலக்காக உள்ளதென்றும், அதனால் மாநிலத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT