இந்தியா

அமர்நாத் மேக வெடிப்பு: விசாரணை நடத்த ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

அமர்நாத் மேக வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

DIN

அமர்நாத் மேக வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. அப்போது யாத்திரையில் ஈடுபட்டிருந்த பலர் வெள்ளத்தில் சிக்கினர். சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காணாமல் போன பலரை மீட்கும் பணி தொடர்கிறது. இன்னும் 30 முதல் 40 பேரைக் காணவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். அமர்நாத் புனித குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபரூக் அப்துல்லா கூறியதாவது, அமர்நாத் மேக வெடிப்பு சம்பவத்தில் அரசு விசாரணை ஆணையம் அமைக்கும் என நம்புகிறேன். இச்சம்பவத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா டிரைலர்!

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT