இந்தியா

அமர்நாத் மேகவெடிப்பு: காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் துணைநிலை ஆளுநா்

ANI

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா. 

அமர்நாத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து யாத்திரையில் ஈடுபட்டிருந்த பலர் சிக்கினர். இந்த சம்பவத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து 15,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 28 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காஷ்மீர் துணைநிலை ஆளுநா் இன்று நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், பலத்த காயமடைந்த சிலர் ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்திய ராணுவம் மற்றும் மாநிலப் படைகள் உள்ளிட்ட அனைத்துக் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. விமானப்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்பட மொத்தம் 8 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT