இந்தியா

கட்சிப் பணிகளை வலுப்படுத்த பாட்னாவுக்குச் செல்கிறார் ஜெ.பி.நட்டா

2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பிகார் பிரிவு அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பிற்காக பாட்னாவுக்குச் செல்கிறார் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா. 

IANS

2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பிகார் பிரிவு அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பிற்காக பாட்னாவுக்குச் செல்கிறார் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா. 

பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், நட்டாவின் வருகைக்கான ஏற்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினார். 

மாவட்டத் தலைவர்கள் மற்றும் அமைப்பின் பிற அதிகாரிகளைத் தவிர அமைப்பின் ஒவ்வொரு பிரிவின் பொறுப்பாளர்களுடனும் அவர் சந்திப்பு நிகழ்த்த உள்ளார் என்று ஜெய்ஸ்வால் கூறினார். 

மேலும், ஜூலை 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு தொழிலாளிக்கும், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் 300 தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், மூன்று நாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஜூலை 31-ம் தேதி அன்று நட்டா வருகை நிகழ்வில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT