சிறப்பு தொழுகை 
இந்தியா

பக்ரீத் பண்டிகை: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

DIN

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியா்கள் அதன்பின் குா்பானி (ஆட்டு இறைச்சி) வழங்குவது வாடிக்கையானதாகும். இதற்காக பல மாதங்களாக ஆடுகளை வாங்கி வந்து வளா்ப்போரும் உண்டு. பக்ரீத் முதல் நாளில் சந்தைகளில் ஆடுகளை வாங்குவோரும் உண்டுகி குர்பானி வழங்கும் வழக்கமும் உள்ளது. 

முன்னதாக பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். தில்லி, போபால், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்துகொண்டனர். பாதுகாப்புப் பணிக்காக காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

டி20 தொடரை வென்றது இலங்கை!

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

SCROLL FOR NEXT