கோப்புப் படம் 
இந்தியா

அசாமில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்

அசாமில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் மற்றும் மாத்திரைகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

அசாமில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் மற்றும் மாத்திரைகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஹித்தேஷ் சந்திர ராய் கூறியதாவது: “ நேற்று (ஜூலை 9) இரவு எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டோம். போதைப்பொருள்கள் வாகனம் ஒன்றில் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாகனத்தின் முன் பகுதில் தொலைத் தொடர்புகள் சேவை என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்தபோது இசைக் கருவிகளில் மற்றும் வாகனத்தின் கூடுதல் சக்கரத்தின் உட்பகுதியில் போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுடிக்கப்பட்டது. இருப்பினும், அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் இருந்தவர்கள் காவல் துறையினரை பார்த்தவுடன் தப்பிவிட்டனர். தப்பிச் சென்றவர்களை பிடிக்கும் முயற்சியில் நாங்கள் தீவிரமாக இறங்கியுள்ளோம்.” என்றார்.

வாகனத்திலிருந்து 6 கிலோ போதைப்பொருள்கள் மற்றும் 2000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

SCROLL FOR NEXT