கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை(கோப்புப்படம்) 
இந்தியா

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிடுகிறார்: முதல்வர் பொம்மை

கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை முதல் பார்வையிடுகிறார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. 

ANI

கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை முதல் பார்வையிடுகிறார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. 

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 

மலைநாடு, குடகு, உத்தர கன்னடா மற்றும் கடலோரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மீட்புப் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட துணை ஆணையர்களுடன் விடியோ கான்பரன்ஸ் மூலம் ஏற்கனவே உரையாடினேன். 

மழை குறைந்துள்ளதால், நாளை முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவேன் என்றார். 

கனமழை காரணமாக குடகு, கார்வார் மற்றும் உடுப்பி ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவும் ஈடுபடுத்தப்பட்டன. 

மேலும், சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT