இந்தியா

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கலத்தில் தேசிய சின்னம்: திறந்துவைத்தார் மோடி

ANI


புது தில்லி: புது தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலத்தினாலான தேசியச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

வெண்கலத்தினால் செய்யப்பட்ட இந்த தேசிய சின்னத்தின் ஒட்டுமொத்த எடை 9,500 கிலோவாகும். இது 6.5 மீட்டர் உயரம் கொண்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேல் பகுதியில் இந்த தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைய மண்டபத்தின் மேல் அமைந்திருக்கும் இந்த தேசிய சின்னத்தின் உருவாக்கம், மண்ணால் மாதிரி உருவாக்கம், கணினியில் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கம் என 8 படிநிலைகளுக்குப் பிறகே வெண்கலத்தில் செய்யப்பட்டு, இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய ஊரக விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT