இந்தியா

திரௌபதி முா்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில், பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனா். 

குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதி முா்மு வெற்றி பெறுவது ஏற்கெனவே உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. முா்முவுக்கு ஆதரவாக சிரோமணி அகாலி தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் வாக்களிக்கவுள்ளன.

தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்முவுக்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும், மக்களவையில் மூன்று உறுப்பினர்களும், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் 23 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT