இந்தியா

குஜராத் கனமழைக்கு 6 பேர் பலி: 27 ஆயிரம் பேர் வெளியேற்றம்

PTI

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஜூன் 1 முதல் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 27,896 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 18,225 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடம் மேலாண்மை அமைச்சர் ரஜேந்திர திரிவாரி தெரிவித்தார். 

சோட்டா உதேபூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட போடேலி நகருக்குச் சென்று வெள்ளம் பாதித்த சில பகுதிகளை முதல்வர் பூபேந்திர படேல் வான்வழி ஆய்வு நடத்தியதாக அவரது அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன. 

சௌராஷ்டிராவில் உள்ள வல்சாத், நவ்சாரி, சூரத், தபி, டாங், நர்மதா, சோட்டா உதேபூர் மாவட்டங்களிலும், கட்ச், ராஜ்கோட், ஜாம்நகர், தேவபூமி துவாரகா மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை காலை வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT