இந்தியா

புதுச்சேரியில் மெல்ல அதிகரிக்கும் கரோனா!

புதுச்சேரியில் கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

PTI

புதுச்சேரியில் கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 165 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,67,879 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்றைய பாதிப்பில், புதுச்சேரி பகுதியில் மட்டும் 127 பேரும், காரைக்காலில் 32 பேரும், யாணத்தில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஹேவில் எந்தவித புது வழக்குகளும் பதிவாகவில்லை. 

மேலும் நேற்று ஒரேநாளில் 2,492 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார இயக்குனர் ஜி.ஸ்ரீராமலு கூறுகையில், 

கரோனா பாதித்து செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 915 ஆக உயர்ந்துள்ளன. இதில் மருத்துவமனைகளில் 10 பேரும், வீட்டு தனிமையில் 905 பேரும் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,65,002 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், நேற்று கரோனா உயிரிழப்பு ஒன்று கூட பதிவாகவில்லை. 

மேலும், தடுப்பூசி போட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,57,360 ஆகவும், அதில் முதல் டோஸாக 9,73,531 ஆகவும், இரண்டாவது டோஸாக 39,540 ஆகவும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT