இந்தியா

நிவாரணம், மீட்புப் பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை இல்லை: கர்நாடக முதல்வர்

PTI

மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் கர்நாடக அரசு மக்களுடன் உள்ளது என்று முதல்வர் பசவராஜ் பொம்பை தெரிவித்தார். 

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பொம்மை கூறுகையில், 

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையால் பல இடங்களில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குடகில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவும், கடல் அரிப்பால் கடலோரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பல கிராமங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள 63 வெள்ள பாதிப்பு கிராமங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

சில இடங்களில் நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சரியான விவரங்கள் விரைவில் பகிரப்படும். 

நிவாரணப் பணிகளுக்கான நிதி குறித்த கேள்விக்கு பதிலளித்த பொம்மை, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.730 கோடி உள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை இல்லை. இழப்புகளை மதிப்பிட்டு தேவைப்பட்டால் மத்திய அரசிடம் உதவி கோரப்படும். 

பல கிராமங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள 63 வெள்ளம் பாதித்த கிராமங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் சில கிராமங்களில் இடம்பெயர மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

அத்தகைய கிராமங்களைப் பாதுகாப்பான இடமாற்றம் செய்வது குறித்து நிபுணர்களின் கருத்துக் கேட்கப்பட்டுள்ளதாக பொம்மை தெரிவித்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT