விடுமுறையில் செல்லும் விமானத் தொழில்நுட்ப ஊழியர்கள்: பாதிக்கப்படுமா சேவை?
சம்பளப் பிரச்னை காரணமாக விமான நிறுவனங்களின் தொழில்நுட்ப ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்னை காரணமாக விமான நிறுவனங்களின் தொழில்நுட்ப ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களின் பராமரிப்பு தொழில்நுட்ப ஊழியர்கள் கடந்த சில நாள்களாகவே சம்பள உயர்வு மற்றும் கரோனா காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்கக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இவர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால், கடந்த 5 நாள்களாக உடல்நிலை சரியில்லை எனக் கூறி பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள் விடுமுறை எடுத்து வருகின்றனர். முதலில், இண்டிகோ விமான நிறுவனத்தில் பிரச்னை ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிற நிறுவனங்களிலும் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மாலத்தீவிலிருந்து புறப்பட்டார் கோத்தபய: அடுத்து எங்கே?
இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“விமானப் போக்குவரத்து இயக்ககம் தொடர்ந்து இந்த பிரச்னையை கண்காணித்து வருகின்றது. தற்போது வரை விமானப் போக்குவரத்து இயல்பு நிலையில் உள்ளது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.
இந்த பிரச்னை குறித்து விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.