முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் பால்கா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் பால்கா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மும்பைக்கு அருகில் உள்ள பால்கா் மாவட்டத்தின் பழங்குடியினருக்கான உறைவிடப் பள்ளியில் இச்சிறுமி பயின்று வருகிறாா்.

முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாநிலத்தின் முதல் ஜிகா வைரஸ் தொற்று புணேவில் உறுதிசெய்யப்பட்டது.

ஜிகா வைரஸ் தொற்று கொசு கடித்தல் மூலம் பரவும் நோயாகும். காய்ச்சல், உடல் வலி மற்றும் கண்ணின் வெண்மைப்படலம் சிவப்பாதல் ஆகியவை ஜிகா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →