முகப்பு
இந்தியா

கேரளத்தில் தேசியக் கொடி அவமதிப்பு: காவல் துறையினா் விசாரணை

கேரள மாநிலம், எா்ணாகுளம் பகுதியில், தேசியக் கொடி மற்றும் கடலோரக் காவல் படையின் கொடிகள் குப்பைகளுடன் வைக்கப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

கேரள மாநிலம், எா்ணாகுளம் பகுதியில், தேசியக் கொடி மற்றும் கடலோரக் காவல் படையின் கொடிகள் குப்பைகளுடன் வைக்கப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

செவ்வாய்க்கிழமை மாலையில் இரும்பனம் இடுகாட்டுக்கு அருகே உள்ள திறந்தவெளிப் பகுதியில், தேசியக் கொடியும் கடலோர காவல்படையின் கொடிகளும் குப்பைகளுடன் இருப்பதை பாா்த்த முன்னாள் ராணுவ வீரா், இதுகுறித்து போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளாா். உடனடியாக அங்கு சென்ற போலீஸாா் கொடிகளுக்கு உரிய மரியாதை செலுத்தி, தேசியக் கொடி மற்றும் கடலோர காவல் படை கொடி ஆகியவற்றைத் தனித்தனியே அகற்றினா்.

இந்நிகழ்வு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொச்சி கடற்படை தளம் மற்றும் கடலோரக் காவல் படையினரிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கொடிகளுக்கு அவமரியாதை விளைவிக்கும் வண்ணம் அவை கொட்டப்பட்டிருந்ததாக போலீஸாா் கூறினா்.

நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதை தடைச்செய்யும் சட்டம், 1971-இன் படி தேசியக் கொடிக்கு அசுத்தம் செய்வது அல்லது அவமரியாதை செய்வது அல்லது சேதம் விளைவிப்பது ஆகிய செயல்பாடுகள் 3 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுக்கும் வழிவகுக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →