இந்தியா

தெலங்கானாவில் தொடர் மழை: பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்

DIN

ஹைதராபாத்: தொடர் கனமழையைக் கருத்தில் கொண்டு தெலங்கனா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 16 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பு காரணமாக அரசு முன்பு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளிகள் ஜுலை 14 திறக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், விடுமுறையை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு, உதவி பெறும் மற்றும் தனியார்) விடுமுறையை ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

ஜூலை 18 முதல் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி வரை அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT