இந்தியா

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவைக்கு அனுமதி

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்துள்ளார்.

DIN

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழந்ததைத் தொடர்ந்து மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஏக்நாத் முதல்வராகவும் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், இன்று தேவேந்திர பட்னாவிஸும் ஏக்நாத் ஷிண்டேவும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து மகாராஷ்டிரத்தில் கனமழையால்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறித்துப் பேசினர்.

இறுதியில்,  மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்குவது தொடர்பாக அனைத்து அனுமதிகளையும் மாநில அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம் என  பட்னாவிஸ் தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாயும் டீசல் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என்றும் 1975 ஆண்டு அவசரநிலையின்போது சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT