இந்தியா

உத்தரப் பிரதேசம்: கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற இருவர் கைது

DIN

உத்தரப் பிரதேசத்தில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தங்களிடம் இருந்த கள்ள நோட்டுகளை பக்ரீத் பண்டிகையின்போது மாற்ற முயன்றதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரிடம் இருந்தும் ரூ.26,300 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இது குறித்து நகர காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியதாவது: “ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் வசித்து வரும் முகேஷ் மற்றும் லோகேந்திரா ஆகிய இருவரையும் நேற்று (ஜூலை 13) காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். சந்தையில் அவர்கள் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்றபோது அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஆகந்த் பிரதாப் சிங் அவர்கள் இருவரையும் கைது செய்தார்.” என்றார்.

கைது செய்யப்பட்ட இருவரும் ராஜஸ்தானில் இருந்து கள்ளநோட்டுகளை கொண்டு வந்து கூட்டமானப் பகுதிகளில் மாற்றுவதனை வழக்கமாக கொண்டுள்ளதாக விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT