காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே(கோப்புப்படம்) 
இந்தியா

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் யார்? ஜூலை 17-ல் முடிவு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் குறித்து ஜூலை 17ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

DIN

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் குறித்து ஜூலை 17ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதியும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து எந்த கட்சியும் இதுவரை அறிவிப்புகளை வெளியிடவில்லை. பாஜக தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

“மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 17ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளன. அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும். அதில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் உறுதி செய்யப்படும்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் தேர்வு செய்யும் நபருக்கு ஆதரவளிக்க கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?

சர்வதேச சுற்றுலாவுக்கு ஈடாக செல்போனைக் கேட்கும் கும்பல்! இப்படியும் ஒரு மோசடி

புதிதாக வங்கி கிரெடிட்/டெபிட் அட்டைகள் பெறும்போது கவனம்!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை! ஏடிஎம் பின் மட்டுமல்ல சிவிவி எண் முக்கியம்!!

பிக் பாஸ் - 9 தொடக்கம்: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT