இந்தியா

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்: குஜராத்தில் கனமழை தொடரும்

DIN

குஜராத்தில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

குஜராத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் குஜராத்தில் உள்ள 6 தாலுகாவில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழைப் பதிவாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கனமழை குறைவதாக தெரியவில்லை. மாநிலத்தில் கன முதல் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை குஜராத்தில் தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று (ஜூலை 15) காலை 6 மணி முதல் 10 மணி வரை தெற்கு குஜராத்தின் வல்சாத் மற்றும் நவ்சரி மாவட்டங்களில் அதிக அளவில் மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வல்சாத் மாவட்டத்தின் கப்ரதா தாலுகாவில் அதிகபட்சமாக 253 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, நவ்சரி (244 மில்லி மீட்டர்), சுத்ரபதா (240 மில்லி மீட்டர்), கந்தேவி (231 மில்லி மீட்டர்), தர்மாம்பூர் (212 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.


 இந்நிலையில், நவ்சரி மற்றும் டாங் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அம்ரேலி, ஜூனாகத்,பாவ்நகர் மற்றும் கிர் சோம்நாத் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT