முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: 24 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய 24 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய 24 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, ஆள்கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, குடும்ப நீதிமன்றங்கள் திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

தமிழகம்...: தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் பட்டியலை மாற்றியமைப்பதற்கான அரசமைப்பு திருத்த மசோதாக்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.