இந்தியா

தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்

தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில்  சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

DIN

தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில்  சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று  காணொலி வழியில் வெளியிட்டார்.

அதில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் பெங்களூரு (indian institute of science) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதில், பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள்) முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்த தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2015-ஆம் ஆண்டுமுதல் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT