முகப்பு
இந்தியா

ஒடிசாவில் 5 மாதங்களுக்குப் பிறகு ஆயிரத்தைத் தாண்டிய கரோனா!

ஒடிசாவில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 15 ஜூலை, 2022 at 4:56 PM
பகிர்:

ஒடிசாவில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 13-ம் தேதியன்று ஒருநாள் பாதிப்பு 1,148 ஆகப் பதிவானது. அதைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது கரோனா பாதிப்பு.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில், 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் 1043 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 12,97,175 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், சுந்தர்கரில் 82 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 9,128 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் தற்போது 4,825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் ஒரேநாளில் 479 பேர் குணமடைந்த நிலையில், 12,83,169 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

மாநில தலைநகர் புவனேஸ்வரில் அமைந்துள்ள குர்தாவில் 335 பேருக்கும், அதைத் தொடர்ந்து கட்டாக்கில் 205 பேருக்கும், சுந்தர்கரில் 106 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.