குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு 
இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த அரசியல் தலைவர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். 

ஏற்கெனவே குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் தேர்தலில் ஆதரவு கோரி அரசியல் கட்சிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

சனிக்கிழமை நடைபெற்ற அரசியல் நிலைக்குழு கூட்டத்திற்குப் பின் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாங்கள் திரெளபதி முர்முவை மதிக்கிறோம். ஆனால் யஷ்வந்த் சின்ஹாவை இந்தத் தேர்தலில் ஆதரிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் 92 சட்டப்பேரவை உறுப்பினர்களும், தில்லியில் 62 சட்டப்பேரவை உறுப்பினர்களும், கோவாவில் இருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT