இந்தியா

பஞ்சாப் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் நிர்மல் சிங் காலமானார்

உடல்நலக்குறைவால் பஞ்சாப் சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் நிர்மல் சிங் கஹ்லோன் இன்று காலமானார். 

DIN

உடல்நலக்குறைவால் பஞ்சாப் சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் நிர்மல் சிங் கஹ்லோன் இன்று காலமானார். 

பஞ்சாப் மாநிலத்தின் சிரோமணி அகாலி தளக் கட்சியின் மூத்த தலைவர் நிர்மல் சிங் கஹ்லோன்(79). உடல்நலக்குறைவால் நீண்டநாள்களாக அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். 

இவரது இறுதிச்சடங்கு குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தாதுஜோத் கிராமத்தில் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நிர்மல் சிங், அகாலி தள ஆட்சியில் 1997 முதல் 2002 வரை அமைச்சராகவும், 2007 முதல் 2012 வரை பஞ்சாப் சட்டப்பேரவையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், நிர்மல் சிங் கஹ்லோன் மறைவுக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களை திமுக அரசு ஏமாற்றுகிறது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

நீதிமன்றத்தில் காலணி வீச்சு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை: யோசனை கேட்கும் உச்சநீதிமன்றம்

ஜன. 2-இல் வைகோ நடைப்பயணம்: முதல்வா் ஸ்டாலினுக்கு அழைப்பு

பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி

பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் -மத்திய அரசுக்கு கேரளம் கடிதம்

SCROLL FOR NEXT