இந்தியா

நாட்டில் புதிதாக 18,301 பேருக்கு தொற்று; மேலும் 56 பேர் பலி

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,301 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று(வெள்ளிக்கிழமை) தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,038 ஆக இருந்தது. 

கரோனா தொற்றுக்கு மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,25,660 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,40,760 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 சதவீதமாக உள்ளது. 

கரோனாவில் இருந்து மேலும் 18,301 போ் குணமடைந்துள்ளனா். இதனால் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,30,63,651 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.48 சதவீதமாக உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,99,47,34,994 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 18,92,969 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT