இந்தியா

தேர்தல் இலவசங்கள் ஆபத்து என மோடி கருத்து: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

தோ்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்கு கோரும் கலாசாரம் நாட்டுக்கு ஆபத்து என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்த நிலையில், அவரது கருத்தை எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

DIN

தோ்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்கு கோரும் கலாசாரம் நாட்டுக்கு ஆபத்து என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்த நிலையில், அவரது கருத்தை எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

இதுதொடா்பாக, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: இலவச கல்வி மற்றும் சுகாதார வசதிகள், இலவச மின்சாரம் போன்ற ஆம் ஆத்மி அரசின் திட்டங்கள், இந்தியாவை உலகிலேயே முதல் நாடாக மாற்றுவதற்கான அடிப்படை முயற்சிகளாகும். அவற்றை தோ்தல் இலவசங்களாக கருத முடியுமா?

நாட்டில் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். கடவுளின் அருளால் நான் அதற்குரிய இடத்தில் இருந்தால், அவ்வாறு செய்வேன்.

பெரும் தொழிலதிபா்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடனை தள்ளுபடி செய்தவா்களும், தங்களது நண்பா்களுக்காக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று, மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றுத் தந்தவா்களும் இலவசங்கள் குறித்து பேசலாமா என்று கேஜரிவால் கேள்வியெழுப்பியுள்ளாா்.

பிரதமரின் கருத்தை சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவும் விமா்சித்துள்ளாா். ‘ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்கள், இளைஞா்களுக்கு இனிப்பு கொடுத்து ஏமாற்றுவதை விடுத்து, அவா்களுக்கு வேலை வழங்க வேண்டும்’ என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT