இந்தியா

குஜராத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

DIN

குஜராத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

குஜராத்தின் தகோத் மாவட்டத்தில் உள்ள மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

ரத்லம் ரயில் நிலைய பிரிவின் கீழ் உள்ள மங்கள் மகுடி ரயில் நிலையத்திற்கும் லிம்கேடா ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று அதிகாலை 1 மணியளவில் நடந்துள்ள இந்த விபத்தினால் தில்லி - மும்பை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் சரக்கு ரயில் என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து பாதையை சரிசெய்யும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT