இந்தியா

சாவன் மாதம்: வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

DIN

இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

சாவன் என்றழைக்கப்படும் ஆடி மாதம் வடமாநிலங்களில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். 

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் பக்தர்கள் ஒன்று கூடுவதற்கும் வழிப்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் கோயிலுக்குச் சென்று ஆர்வத்துடன் சிவபெருமானை வழிபாடு செய்தனர். 

அதன்படி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில், மும்பையில் உள்ள பாபுல்நாத் கோயில், தில்லியில் உள்ள கௌரி சங்கர் கோயில், உ.பி.யின் காஜியாபாத்தில் உள்ள துதேஷ்வர் நாத் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

வழிபாடுகளில் பங்கேற்க இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சிவபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பானிபூரி விற்ற முன்னாள் ஐடி ஊழியர்.. கர்ப்பிணி மனைவி தற்கொலையில் மர்மம்!

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்று இந்திய இளம் வீரர் SM யுகன் சாதனை! | SM YUGAN

ஹீரோவின் இரண்டு புதிய பைக்குகள்! குறைந்த விலையில்...

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி? ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் பதில்!

நெல்லுக்கான ஆதார விலை ரூ.2500 ஆக உயர்வு: தமிழக அரசாணை வெளியீடு

SCROLL FOR NEXT