இந்தியா

மாநிலங்களவையில் பதவியேற்காத இளையராஜா: காரணம் என்ன?

DIN

மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பு நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி. உஷா ஆகியோர் இன்று பங்கேற்கவில்லை.

மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவிக்கு இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அப்போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, இளையராஜா என்று கூப்பிட்டவுடன் அவையில் இருந்த அனைவரும் கைத்தட்ட தொடங்கினர். ஆனால், இளையராஜா இன்று அவைக்கு வராததை பின்னர் அறிந்த உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பி.டி. உஷாவும் இன்று பங்கேற்கவில்லை.

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளதால், இளையராஜாவால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தொடரின் வரும் நாள்களில் பங்கேற்று பதவியேற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT