இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாள் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன. கூட்டத்தின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முதல் நாள் கூட்டம் தொடங்கியுள்ளன. மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முக்கியமாக, தொழிற்போட்டி சட்டம்-2002, திவால் சட்டம்-2016 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றுக்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், நாட்டில் நிலவும் பணவீக்கம், அக்னிபத் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT