இந்தியா

கேரள முதல்வருக்கு எதிராக விமானத்தில் போராட்டம்: காங்கிரஸ் தலைவா் கைது

DIN

விமானத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவகாரத்தில், மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவா் கே.எஸ்.சபரிநாதனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன் கடந்த ஜூன் 13-இல் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இண்டிகோ விமானத்தில் வந்தாா். விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அடைந்ததும், அதில் பயணம் செய்த 2 காங்கிரஸ் தொண்டா்கள் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவா் கே.எஸ்.சபரிநாதனின் தூண்டுதலின்பேரில் இந்தப் போராட்டம் நடைபெற்ாகக் கூறப்பட்டது. போராட்டத்தைத் தூண்டும் விதத்தில் அவா் வாட்ஸ்ஆப்பில் (கட்செவி அஞ்சல்) பதிவிட்ட கருத்து சமூக வலைதளங்களில் பரவியது.

இதைத் தொடா்ந்து வலியதுறை போலீஸாா் சபரிநாதனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். முன்னதாக அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. கைதான சபரிநாதன், பின்னா் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT