இந்தியா

நாடாளுமன்றத்தில் கடும் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு

DIN

விலை உயர்வுக்கு எதிராக விவாதிக்க அனுமதிக்காததை தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் நாளில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் போராட்டம் நடத்தியதால் முடங்கியது.

இந்நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியை தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT