இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்: பழங்குடியின பெண் காயம்

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்கல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் காயமடைந்தார். 

PTI

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்கல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் காயமடைந்தார். 

இன்று காலை கேதுல்நார் கிராமத்தைச் சேர்ந்த சோம்லி ஹேம்லா என்ற பெண் கிராமத்திற்கு அருகிலுள்ள வனத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆஞ்சநேய வர்ஷ்னே தெரிவித்தார். 

அந்த பெண் கவனக்குறைவால் அழுத்தம் பொருந்திய வெடிகுண்டைக் காலால் மிதித்ததால் வெடித்துச் சிதறியது. காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகிலுள்ள கிராமத்தின் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். 

பிஜப்பூர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ளது. வனப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களைக் குறிவைத்து, மண்ணில் வெடிகுண்டுகளைப் புதைத்து வைக்கின்றனர் நக்சல்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT