இந்தியா

 சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொலைத் தொடர்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களின் பிராந்திய அமர்வுகள்: அமைச்சர் உறுதி

 நமது நிருபர்

தில்லில் உள்ள தொலைத்தொடர்பு தாவா தீர்வு, மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களின் பிராந்திய அமர்வுகள் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் நிறுவுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின்னணுத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்ததாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தில்லியில் சந்தித்து பி.வில்சன் புதன்கிழமை கடிதம் அளித்தார். அதில், "நாட்டில் பணமில்லா பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, நவீன வலுவான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் வணிக வழக்குகள் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாதது. இந்நிலையில், வழக்காடும் நுகர்வோர், வழக்குரைஞர் ஆகியோரைக் கருத்தில் கொண்டு சென்னை மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் தொலைத்தொடர்பு தாவா தீர்வு, மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகள் அமைக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
 தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ஒளிபரப்பு துறைகளில் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் அதிகார வரம்பை தொலைத்தொடர்பு தாவா தீர்வு, மேல் முறையீட்டு தீர்ப்பாயம் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பொருளாதாரம், நவீன வலுவான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை நாடு கொண்டுள்ளது. தென்மாநிலங்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தொலைத் தொடர்பு இணைப்புகள் அதிகமாக உள்ளன. வணிக ரீதியான தகராறுகளை விரைவாகவும் திறமையாகவும் தீர்ப்பதற்கு அரசு ஒரு திறமையான தளத்தை வழங்க வேண்டும்.
 கடந்த 10 ஆண்டுகளாக தில்லியில் உள்ள முதன்மை அமர்வில் சுமார் 5,100 வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும், நுகர்வோர்களும், வழக்குரைஞர்களும் நீண்ட தூரத்திலிருந்து வரவேண்டிய நிலையில், அவர்களது நலனுக்காக சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் தொலைத் தொடர்பு தாவா தீர்வு மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகளை நிறுவ தேவை ஏற்பட்டுள்ளது என்று கடிதத்தில் வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
 இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், "இந்தப் பிரச்னை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்படும்' என உறுதி அளித்துள்ளதாக பி.வில்சன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT