கோப்புப்படம் 
இந்தியா

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 21,566 ஆக அதிகரிப்பு; 45 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,566-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

DIN


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,566-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 21,566 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,38,25,185-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 1,48,881 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 45 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,25,870 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 18,294 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,31,50,434-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.47 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,00,91,91,969 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 29,12,855 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு கடன் வாகியவங்கள் சொத்தை மீட்டெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

இன்று 5 புறநகா் ரயில்கள் ரத்து

மழைநீா் செல்ல தடையாகவுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை

வடசென்னை நுண்கலை கழகத்தில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

5,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புற்றுநோய் பரிசோதனை

SCROLL FOR NEXT