இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

DIN

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் அதிகாரி முன்பு காலை 11 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தொடர்ந்து, மாநில சட்டப்பேரவைகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனா்.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து, மறுநாள் அனைத்து வாக்குப் பெட்டிகளும் தில்லியில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தேர்தலில் திரெளபதி முா்மு வெற்றி பெறும்பட்சத்தில், நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவியை அடையும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அவா் பெறுவாா்.

தற்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-இல் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-இல் பதவியேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா பயிற்சியாளர்கள் படுகாயம்!

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

SCROLL FOR NEXT