முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசம்: ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி

உத்தரப் பிரதேசத்தின் சேலம்பூர் ரயில் நிலையத்தில் தம்பதி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 21 ஜூலை, 2022 at 3:46 PM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் சேலம்பூர் ரயில் நிலையத்தில் தம்பதி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த சில ஆண்டுகளாக தீபக் யாதவ் (25 வயது), ராஜ்பார் (22 வயது) இருவரும் உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் பச்சூர் கிராமத்தில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று முன் தினம் (ஜூலை 19) அன்று காலை இந்தத் தம்பதி அவர்களது வீட்டை விட்டு புறப்பட்டு மறுநாள் (ஜூலை 20) கோபால்பூர் கிராமத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் வாராணசியில் இருந்து வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை காவல் ஆய்வாளர் சங்கல்ப் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.  

இந்த தம்பதியின் உடல்கள் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.