இந்தியா

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கொண்டாடி மகிழ ஒரு தகவல்

DIN


நாட்டின் பொதுத் துறை வங்கிகளில் முன்னிலை வகிக்கும் எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளையும், வசதிகளையும் அவ்வப்போது அறிவித்து வருவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தகவலைப் படித்தால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

அதாவது, எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை மற்றும் மினி ஸ்டேட்மென்ட் போன்றவற்றை வாட்ஸ்ஆப் மூலமே பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான்.

இது குறித்து எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது என்னவென்றால், உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே உங்கள் வங்கிச் சேவையை பெறலாம். வங்கிக் கணக்கு விவரம் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இந்தச் சேவையை பெறுவது?

எஸ்பிஐ வாட்ஸ்ஆப் வங்கிச் சேவையைப் பெற நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு WAREG என்று உங்கள் செல்லிடப்பேசியில் டைப் செயது, ஒரே ஒரு ஸ்பேஸ் விட்டு 7208933148 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்ணிலிருந்து இந்த குறுந்தகவல்  அனுப்பப்பட வேண்டும்.

இந்த குறுந்தகவலை அனுப்பியதும் உங்கள் செல்லிடப்பேசியில் உள்ள வாட்ஸ்ஆப்க்கு எஸ்பிஐயின் 90226 90226 என்ற எண்ணிலிருந்து தகவல் வரும்.

இந்த எண்ணை நீங்கள் செல்லிடப்பேசியில் சேமித்துக் கொள்ளலாம்.

பிறகு, இந்த எண்ணுக்கு Hi SBI என்று பதில் அனுப்பலாம். அல்லது hi என்றும் அனுப்பலாம். நீங்கள் அனுப்பியதும் உங்களுக்கு இந்த தகவல் கிடைக்கப்பெறும்.

உங்களுக்குத் தேவையான வாய்ப்புடன் இருக்கும் எண்ணைப் பதிவு செய்து சேவையைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT