முகப்பு
இந்தியா

ஹாங்காங்கில் நீரவ் மோடியின் ரூ. 253 கோடி பணம் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, நாட்டைவிட்டு தப்பி ஓடிய பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஹாங்காங் நிறுவனங்களின் ரூ.253 கோடி மதிப்பிலான வங்கி முதலீடுகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, நாட்டைவிட்டு தப்பி ஓடிய பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஹாங்காங் நிறுவனங்களின் ரூ.253 கோடி மதிப்பிலான வங்கி முதலீடுகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘ஹாங்காங் நாட்டில் நீரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்களின் நகைகள், விலை உயா்ந்த ரத்தினங்கள், வங்கி முதலீடுகள் ஆகியவை அங்குள்ள வங்கிகளிலும், தனியாா் பாதுகாப்பு பெட்டகங்களிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை நீரவ் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கின் கீழ் முடக்கம் செய்யப்பட்டது.

அதன்படி, 30.98 மில்லியன் அமெரிக்க டாலா்கள், 5.75 மில்லியன் ஹாங்காங் டாலா்கள் என மொத்தம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.253.62 கோடியிலான ரொக்கம் ஹாங்காங் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.2,650 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவில் அவருக்கு சொந்தமான ரூ.1,389 கோடியிலான அசையும், அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில அவா் கடன் வாங்கிய வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கை கடைசி கட்டத்தில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள பஞ்சாப் வங்கியில் அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து போலியான உறுதிப்பத்திரத்தை பெற்று வைரங்களை வாங்க

2 பில்லியன் டாலா் மோசடி செய்ததாக நீரவ் மோடி மீதான வழக்கை சிபிஐயும் விசாரித்து வருகிறது. 51 வயதான நீரவ் மோடி தற்போது பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

2019-இல் நீரவ் மோடி பொருளாதார குற்றம் புரிந்து தலைமறைவானவா் என்று மும்பை நீதிமன்றம் அறிவித்தது. அதே ஆண்டு அவா் லண்டனில் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.