இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு

PTI

விலை உயர்வுக்கு எதிராக விவாதிக்க அனுமதிக்காததை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்ந்து ஐந்தாம் நாள் கூட்டம் தொடங்கியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியைத் தொடர்ந்து 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியவாறும், தொடர் முழக்கங்களை எழுப்பினர். 

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT